deepamnews
இலங்கை

கால்நடைகளை இறைச்சிக்காக பயன்படுத்த வேண்டாம் என அறிவிப்பு

வடமேல் மாகாணத்தில் சுமார் 2000 மாடுகள் தோல் கழலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  வடமேல் மாகாணத்தின் மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்துவது உகந்ததல்ல என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பதிவாகியிருந்த தோல் கழலை நோய் வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்திலும் தற்போது பரவியுள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் மடலஸ்ஸ, அரக்கியாலை, தொரனகெதர, கெகுனுகொல்ல, தம்பிட்டிய பகுதிகளில் இந்த நோய் பதிவாகியுள்ளது.

Related posts

பரந்தனில் வெடிபொருட்கள் மீட்பில் விசேட அதிரடிப்படையினர்.

videodeepam

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு.. இளைஞர் சமூகம் அவதானம்!

videodeepam

அரச வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திர சிகிச்சைகளை தாமதப்படுத்த தீர்மானம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு

videodeepam