deepamnews
இலங்கை

சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரஜினிகாந்தின் உதவியை நாடும் இலங்கை

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று வெங்டேஸ்வரன் கூறியுள்ளார்.

இலங்கைக்கான பயணத்தின் போது, பிரத்தியேகமான ராமாயண பாதை மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான பௌத்த தலங்களை ஆராய வேண்டும் என்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தார்.

Related posts

குரங்குகள் விவகாரம் – அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பத் திட்டம்!

videodeepam

தேவையேற்படின் போராட்டங்களை மேற்கொள்வதில் தவறில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

videodeepam

வலி.வடக்கில் மீளக் குடியேற்றப்படாமல் உள்ள 2500 குடும்பங்கள் ஜனாதிபதியை சந்தித்து முயற்சி

videodeepam