deepamnews
இலங்கை

வலி.வடக்கில் மீளக் குடியேற்றப்படாமல் உள்ள 2500 குடும்பங்கள் ஜனாதிபதியை சந்தித்து முயற்சி

வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளின் உரிமையாளர்களான, 2 ஆயிரத்து 500 குடும்பங்கள், தங்களின் குறைகளை எடுத்துக் கூறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளன.

வலிகாமம் வடக்கில், இருந்து இடம்பெயர்ந்து வாழும், இந்த மக்களின் சார்பில் கருத்து வெளியிட்ட, வலிகாமம்-வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம், மயிலிட்டி மற்றும் பலாலியில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 3,500 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல்  உள்ளதாகக் குறிப்பிட்டார்.

1990ஆம் ஆண்டு முதல் சுமார் 6,500 ஏக்கர் காணிகள் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுமார் 3,500 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், மயிலிட்டி மற்றும் பலாலி பகுதிகளில் இன்னும் 3,000 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படாமல்  உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கேசன்துறை, கீரிமலை, வறுத்தலைவிளான் மற்றும் கட்டுவான் ஆகிய பகுதிகளில் 3500 ஏக்கர் காணிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், அதில் சுமார் 500 ஏக்கர் காணிகள் இன்னமும் படையினரால் பயன்படுத்தப்படுவதாகவும் குணபாலசிங்கம் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து எமது குறைகளை விளக்குவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மயிலிட்டியைச் சேர்ந்த 700 மீனவ குடும்பங்களும், பலாலியைச் சேர்ந்த சுமார் 2,000 குடும்பங்களும் மீளக்குடியேற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் டெங்கு நோய் பரவல் தீவிரம் – சுகாதார திணைக்களம் எச்சரிக்கை

videodeepam

பொதுமக்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

videodeepam

எரிபொருள் சந்தையில் மேலும் ஒரு நிறுவனம் பிரவேசம் – ஒப்பந்தம் கைச்சாத்தானது

videodeepam