deepamnews
இலங்கை

வறுமைக் கோட்டின் கீழ் 9.6 மில்லியன் இலங்கையர்கள்

சுமார் 9.6 மில்லியன் இலங்கையர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது 42 வீதமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தனர்.

அந்த எண்ணிக்கை 2022 ஒக்டோபரில் 9.6 மில்லியனாக அதிகரித்துள்ளது என்றும் தமது ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழ் கட்சிகள் வவுனியாவில் நாளை ஒன்றுகூடல்

videodeepam

அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பொறுத்தே நிதியுதவி

videodeepam

விரைவில் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் – இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த அறிவிப்பு

videodeepam