deepamnews
இலங்கை

இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா கடும் எச்சரிக்கை

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செல்லுபடியாகும் வீசா இன்றி தமது நாட்டுக்குள் வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.

அவுஸ்ரேலியவின் இறையாண்மை எல்லைகளுக்கான நடவடிக்கை தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் மற்றும், அவுஸ்திரேலியாவின் ஆட்கடத்தல் மற்றும் மனித கடத்தல் தொடர்பான தூதுவர் லூசியன் மான்டன் ஆகியோர் அண்மையில் இலங்கைக்கு  பயணம் செய்து பல்வேறு சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.

இவர்கள் ஓகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரையான தமது இலங்கை பயணம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுக்களின் மூலம், சிறந்த நட்பு கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான, அறிக்கையிடப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல், கடற்கொள்ளை, பயங்கரவாதம் மற்றும் ஆட்கடத்தல் போன்ற நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அவுஸ்ரேலியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாம் – மனித உரிமைகள் ஆணைக்குழு

videodeepam

அரச ஊழியர்களின் சம்பளத்தை பறிப்பது சரியா – சஜித் பிரேமதாச கேள்வி

videodeepam

மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் : ஜூலி சங் உறுதி!

videodeepam