deepamnews
இலங்கை

ரணில் தேசிய சொத்தானது நாடு செய்த அதிஷ்டம் – வஜிர அபேவர்த்தன

ரணில் விக்ரமசிங்க என்ற தலைவர் தேசிய சொத்தாக எஞ்சியிருந்தமை நாட்டின் அதிஷ்டம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உருப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஹபுராதுவையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“ரணில் விக்ரமசிங்க எனும் அரசியல் தலைவர் உடைந்து, அழிந்துபோன தேசத்தை எப்படி கட்டியெழுப்புவது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்.

அழிவை ஏற்படுத்தும் நபர்களால் நாட்டைக் கட்டி எழுப்ப முடியும் என எவராவது நினைத்தால் அது தவறாகும்.

ரணில் விக்ரமசிங்கவை அச்சுறுத்தவே அவரது வீட்டை எரித்தனர். அவரையும் என்னையும் பதவி விலகுமாறு கோரி பல தொலைபேசி அழைப்புகள் வந்தன.

ஆனால் அவர் நாட்டுக்காக நாட்டின் எதிர்காலத்துக்காக தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்” என்றார்.

அதேநேரம் அதிகமான நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நான் அவரின் அருகில் இருந்தேன் அவருக்கு விடுக்கப்பட்ட அழுத்தங்களை இட்டு நான் குழப்பம் அடையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு சந்தர்ப்பத்தில் பதவி விலகுவீர்களா? என அவரிடம் கேட்டபோது,  நாம் இந்த பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்றும், கட்சி அரசியலுக்கு அப்பால் இந்நாட்டின் எதிர்காலம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எதிர்கால சந்ததியினர் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும்  அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

Related posts

ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் – சஜித் வாக்குறுதி

videodeepam

யாழில் இன்று அரசுக்கு எதிராக போராட்டம்

videodeepam

நெடுந்தேவில் இடம்பெற்ற கொலைக்கும் கடற்படைக்கும் தொடர்பு-செல்வராஜா கஜேந்திரன் தெரிவிப்பு .

videodeepam