deepamnews
இந்தியா

இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தில் தொடரும் வன்முறை – 5 பேர் உயிரிழப்பு.

இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தில் இரண்டு மதத்தவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக நிலைமை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டதாக அந்த மாநில அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

எனினும் நேற்று முன்தினம் மாலை சில வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்முறை சம்பவங்கள் ஏற்படுமாயின் 112 என்ற இலக்கத்துக்கு அறியப்படுத்துமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஹரியாணா மாநிலத்தின் நூஹ் பகுதியில் இடம்பெற்ற மத ஊர்வலம் ஒன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சுமார் 2 ஆயிரத்து 500 பேர் மதஸ்தலம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த நிலையில் அவர்களை பொலிஸார்  மீட்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் நேற்று முன்தினம் அதிகாலை மதஸ்தலம் ஒன்று தீ வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹரியாணா மாநிலத்தின் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related posts

ஊழலை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும் –  ஜி 20 நாடுகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்.

videodeepam

இந்தியா – சீனா இடையே பதற்றம் – நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம்.

videodeepam

காலாவதியான சட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு

videodeepam