deepamnews
இலங்கை

நலன்புரிக்கு தகுதியற்றோரை நீக்கும் பணிகள் ஆரம்பம் – செஹான் சேமசிங்க தெரிவிப்பு.

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான முதலாம் தவணை நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதன் பின்னர், நலன்புரிக்கு தகுதியற்றோரை நீக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கு பொதுமக்களிடம் இருந்து உதவி கோருவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, வார நாட்களில் முற்பகல் 9 மணி முதல், மாலை 4 மணி வரையில், 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 15 இலட்சம் பயனாளிகளில், விபரங்கள் உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்துக்கான 5 பில்லியன் ரூபா கொடுப்பனவு அரச வங்கிகளில் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பயனாளிகள் குறித்த நிதியை பெற்றுக்கொள்ளும் திகதி குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பை எதிர்வரும் நாட்களில் வெளியிடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாளைய தினம், அரச வங்கிகளுடன் அஸ்வெசும திட்டம் தொடர்பிலும், அந்த திட்டத்தின் ஊடாக பயனாளர்களுக்கு நிதியை சீராக வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

இன்றையதினம் அரச வங்கிகளுக்கே குறித்த நிதி மாற்றப்படுகிறது.

ஆகையால் இன்றைய தினம் பயனாளிகளுக்கான கணக்குகளில், வைப்பிலிடப்படமாட்டாது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்;டுள்ளார்.

Related posts

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் – நீதி அமைச்சர் விஜயதாச அறிவிப்பு

videodeepam

நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில் முதலில் எம்.பிக்கள் திருந்த வேண்டும் – அமைச்சர் பந்துல

videodeepam

அதிகளவு போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் யாழ்ப்பாணத்தில் மரணம்

videodeepam