deepamnews
இலங்கை

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிராந்திய தேர்தல்கள் அலுவலகம் திறப்பு!

தேர்தல்கள் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் எற்பாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிராந்திய தேர்தல்கள் அலுவலகம் இன்று யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேர்தல்கள் திணைக்கள நாயகம் தவிசாளர் க. ஸ்ரீ சமன் ஸ்ரீ  ரத்தனநாயக்க கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இக்கட்டிடத்திற்கு 2019.06 அன்று ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு

அதற்காக 08 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது.

இதில் தேர்தல்கள் திணைக்கள செயலாளர் ஆர்.ப.கேரத், தேர்தல்கள் திணைக்கள உறுப்பினர் ஏ.பாயிஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆ.அமல்ராஜ், பிரதேச செயலாளர்கள், உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் கட்டாய நடைமுறை

videodeepam

கடன் விவகாரங்களில் இலங்கை அதிகாரிகளின் முன்னேற்றத்தை வரவேற்கிறது சர்வதேச நாணய நிதியம்

videodeepam

இரண்டாந்தர மொழி இண்றியமையாதது-வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.

videodeepam