deepamnews
மருத்துவம்

முகப்பரு மற்றும் தழும்புகளை மறைய வைக்க சில எளிய இயற்கை வழிகள் இதோ !!!

பருக்களை கிள்ளுவதனால் ஏற்படும் தழும்புகள் முக அழகை கெடுத்துவிடும். இதனை தவிர்க்க
3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 5 துளிகள் துளசி எண்ணெய் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து, முகத்தை வெதுவெதுப்பான நீரில் துடைத்து, இதனை தினமும் இரவில் படுக்கும் முன் பயன்படுத்தி வந்தால், பருக்கள் விரைவில் மறையும்.

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. எனவே ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, 1 டீஸ்பூன் தேன் மற்றும் க்ரீன் டீ சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் மறையும்.

 2 டேபிள் ஸ்பூன் புதினா பேஸ்ட்டை, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து, அதோடு 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து,  ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் இரண்டு முறை அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதன்  மூலமும் பருக்களால் வந்த தழும்புகளைப் போக்கலாம்.

Related posts

நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

videodeepam

நரை முடியை எல்லாம் கருப்பாக மாற்றும் செம்பருத்தி இலை!!!

videodeepam

​பால் மற்றும் பால் பொருள்கள் முகப்பரு சருமத்துக்கு நல்லதா?​

videodeepam