deepamnews
இலங்கை

வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வெண்ணைத்தாழித் திருவிழா.

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவத்தின் 10 ஆவது திருவிழாவாகிய வெண்ணைத்தாழித்திருவிழா நேற்று (22.09) மாலை வசந்த மண்டப பூசைகளுடன் ஆரம்பமாகி நடைபெற்றது.

விநாயகர், வல்லிபுர ஆழ்வார், சீதேவி, பூமாதேவி, சங்கு, சக்கரத்தாழ்வார், ஆண்டாள் ஆகிய தெய்வங்கள், உள்வீதி யுடாக வலம்வந்து வெளிவீதி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம் பெற்ற திருவிழாவில், வடமராட்சி இளைஞர்களால் கண்ணணின் வெண்ணைதாழி திருடி உண்ட இதிகாச வரலாறு எடுத்துக் காட்டும் வகையில் நாடகம், நடன நிகழ்வுகள் இதன்போது ஆற்றப்பட்டன.

இத் திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியார்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மின்சார கட்டண திருத்தம் சாத்தியமற்றது – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு

videodeepam

கொழும்புக்கு வாரந்தோறும் மூன்று விமானங்களை இயக்கவுள்ள நாடு!

videodeepam

அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – எரிசக்தி அமைச்சர்

videodeepam