deepamnews
இலங்கை

மின்சார கட்டண திருத்தம் சாத்தியமற்றது – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு

2023 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தர்க்க ரீதியிலான அடிப்படையில், மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விருப்பம் இல்லாவிட்டாலும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.  

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக தௌிவுபடுத்தினார்.

கடந்த காலத்திற்கு பொருந்தும் வகையில், மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான நடைமுறை சாத்தியம் இல்லை என ஜனக்க ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, இடைக்காலத்திற்கான மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான இயலுமையும் இல்லை என தெரிவித்த அவர்,
சட்டத்தின் பிரகாரம் அதனை செய்வதற்கான இயலுமை கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை எடுக்கும் தீர்மானம் நாட்டின் சட்டத்திற்கு முரணானது என்றால் அது செல்லுபடியாகாது. மின்சார சட்டம் என்பது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டம் என ஜனக்க ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Related posts

தேர்தலுக்காக இதுவரை கிடைக்கப்பெற்ற நிதி – அரச அச்சகம் அறிவிப்பு

videodeepam

காஸா எல்லையில் இருந்து 13 இலங்கையர்கள் எகிப்தின் ரஃபா எல்லையை அண்மித்துள்ளனர்.

videodeepam

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின சுதந்திர தின நிகழ்வுக்கு 200 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பு

videodeepam