deepamnews
இந்தியா

சட்டப்பேரவையில் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது – திமுக எம்எல்ஏக்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சட்டப்பேரவையில் திமுகவைச்சேர்ந்த எந்த உறுப்பினரும் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது, ஆளுநருக்கு எதிராக பேனர், போஸ்டர் ஒட்டக்கூடாது” என திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில்நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் போது ஆளுநரை தாக்கி பேசக்கூடாது. குறிப்பாக தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் நேற்று முன்தினம்  நடந்த சம்பவத்தை திரும்பவும் நினைவுகூரக்கூடாது. உறுப்பினர்கள் பேசும் போது ஆளுநர் உரையில் உள்ள விஷயங்கள், வளர்ச்சித்திட்டங்கள், தொகுதியின் கோரிக்கைகளை மட்டுமே பேச வேண்டும். போன்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் ஜன.13ம் தேதி வரை நடைபெற இருக்கிற நிலையில், பேரவையில் பேச வாய்ப்பு கிடைக்கும் அமைச்சர்கள், புதிதாக பதவி ஏற்றுள்ள, துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் யாரும் சட்டப்பேரவையில் தேவையில்லாத விஷயங்களை பேசக்கூடாது. அதேபோல் யாரையும் தாக்கியோ, புகழ்ந்தோ பேசக்கூடாது. துறைசார்ந்த விஷயங்களையும், தொகுதியின் விஷயங்களையும் மட்டுமே நேரிடியாக பேச வேண்டும். அவையின் நேரத்தை வீணடிக்கும் விதத்தில் தேவையற்ற விஷயங்களை பேசக்கூடாது. இவைகளை திமுக கொறடா கண்காணிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

இலங்கையுடனான இருதரப்பு இராணுவ பயிற்சிகளை அதிகரிக்க திட்டம் – இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

videodeepam

நரேந்திர மோடி குறித்த கருத்துகளை நோபல் குழுவின் துணைத்தலைவர் மறுப்பு

videodeepam

பிரபல திரைப்பட இயக்குனரும், காமெடி நடிகருமான மனோபாலா காலமானார்..!

videodeepam