deepamnews
சர்வதேசம்

கொவிட் கட்டுப்பாட்டு சர்ச்சை – தென்கொரியா, ஜப்பானிற்கு எதிராக சீனா பதில் நடவடிக்கை

தென் கொரிய பிரஜைகளுக்கு குறுகியகால விசா வழங்குவதை சீனா இடைநிறுத்தியுள்ளது.

சீனப் பயணிகளுக்கு தென் கொரியா கட்டுப்பாடுகளை விதித்தமைக்கு பதிலடியாக இத்தீர்மானத்தை சீனா  மேற்கொண்டுள்ளது.

தென் கொரியாவின் சோல் நகரிலுள்ள சீனத் தூதரகம் இது தொடர்பாக இன்று தெரிவிக்கையில், ‘கொரிய பிரஜைகளுக்கு குறுகிய கால விசா வழங்குவதை  கொரியாவிலுள்ள சீனத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூததரகங்கள் இடைநிறுத்தவுள்ளன. சீனா மீதான பாரபட்சமான கட்டுப்பாடுகளை தென் கொரியா நீக்குவதற்கு அமைய இந்நடவடிக்கையில் மாற்றங்கள் செய்யப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜப்பானுக்கு எதிராகவும் இதுபோன்ற நடவடிக்கையை சீனா அமுல்படுத்தியுள்ளதாக ஜப்பானின் கியோடோ செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.

கொவிட்19 பரவல் கட்டுப்பாட்டில், பூச்சிய கொவிட் கொள்கையை கடைபிடித்த சீனா, அதை கைவிட்டுள்ளது. 3 வருடங்களின் பின் தனது எல்லையை சீனா நேற்றுமுன்தினம் முதல் திறந்துவிட்டுள்ளது.

இதனால், பெரும் எண்ணிக்கையான சீன மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்குத் தயாராகும் நிலையில், சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை பல நாடுகள் அறிவித்துள்ளன.  இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Related posts

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு

videodeepam

10 தடவைகளுக்கு மேல் அமெரிக்க பலூன்கள் அத்துமீறின – சீனா குற்றச்சாட்டு

videodeepam

தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்துக்குள் ஒரே நாளில் 18 எச் -6 விமானங்களை அனுப்பியது சீனா

videodeepam