deepamnews
இலங்கை

யாழில் 21வயது இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

பொன்னாலை பிள்ளையார் கோவிலடியில் உள்ள குளத்திற்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில் இளைஞன் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணமோகன் கிருசாந்தன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக அடையாளங்காணப்பட்டுள்ளார்.

இளைஞர் கடந்த 5 மாதங்களாக பொன்னாலையில் உள்ள சித்தப்பா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது 21வது பிறந்ததினம் நேற்றாகும்.

நேற்றிரவு அவர் காணாமல் போயுள்ளார். உறவினர்கள் அவரை தேடும் பணிகளை முன்னெடுத்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது காலணி மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன கிணற்றுக்கு வெளியே காணப்பட்டது.

குறித்த இளைஞன் பல மாதங்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த மரணம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மத்திய வங்கி சட்டமூலத்தை வியாழக்கிழமை விவாதத்திற்கு எடுக்க தீர்மானம்

videodeepam

புலம்பெயர் அமைப்புகளுக்கு மீண்டும் அழைப்பு விடும் இலங்கை அரசு

videodeepam

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்.

videodeepam