deepamnews
இலங்கை

கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடையும் – ஜனாதிபதி ரணில்

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சியம்பலாண்டுவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ரதுமட பகுதியில் பயிர்ச்செய்கை தொகுதியொன்றை பார்வையிட்டதன் பின்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சீன நிதி அமைச்சருடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக தொலைபேசி மூலம், கலந்துரையாடல் ஒன்றை அண்மையில் முன்னெடுத்ததாக ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகருக்கு சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைவுக்கு கடன் வழங்கியுள்ள பிரதான நாடுகளான சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முல்லைத்தீவில் சிறுமிகளை கடத்த முயற்சித்த விவகாரம் – விசாரணை தீவிரம்

videodeepam

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி நிறுத்தம்

videodeepam

19 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் மின்னல் எச்சரிக்கை!

videodeepam