deepamnews
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருடன் இலங்கை அரசின் குழு சந்திப்பு

வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுமத்தின் வருடாந்த கூட்டங்களில் பங்குகொள்ளும் இலங்கை பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுராவை சந்தித்துள்ளனர்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான அரசாங்க குழு, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரியுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியைப் பெறுவதற்குத் தேவையான அடுத்த நடவடிக்கைகள் மற்றும் இலங்கையின் அண்மைய பொருளாதாரப் போக்குகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அரசாங்க குழு நீண்ட கலந்துரையாடலை நடத்தியுள்ளது.

பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அமுல்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களில் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் கலந்துரையாடப்பட்ட வேலைத்திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் சபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முன்னோக்கி வழிகள் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடியதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Related posts

பல்கலைக்கழகங்களுக்குள் பொலிஸார் – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

videodeepam

அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

videodeepam

உலகில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் கொழும்பு நான்காமிடம்

videodeepam