deepamnews
இலங்கை

வல்லையில் மூதாட்டியின் தாலி அபகரிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து வழிப்பறிக் கொள்ளைகள், இடம்பெற்று வருகின்றன.

அச்சுவேலி, வல்லை சந்தி பகுதியில் நேற்று மதியம் நடத்தப்பட்ட வழிப்பறிக் கொள்ளைச் சம்பவத்தில் மூதாட்டி ஒருவர் தாக்கப்பட்டு,  10 பவுண் தாலி கொள்ளையிடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே இந்த வழிப்பறி கொள்ளையை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

உறவினர் ஒருவருடன் நவாலி பகுதியில் இருந்து புலோலி நோக்கி சென்று கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி விழுத்தி, கொள்ளையர்கள் தாலியை அபகரித்துள்ளனர்.

காயமடைந்த மூதாட்டி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக வல்லை பகுதியில் வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஒரு வாரத்துக்குள் 4 வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் இப்பகுதியில் பதிவாகியுள்ளன.

Related posts

பங்களாதேஷ் மத்திய வங்கியின் முடிவினால் மேலும் நெருக்கடியில் இலங்கை

videodeepam

தமிழர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடு்க்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

videodeepam

13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 7 பேர் உயிரிழப்பு – பொலிஸார் அறிவிப்பு

videodeepam