deepamnews
இலங்கை

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின சுதந்திர தின நிகழ்வுக்கு 200 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பு

75 ஆவது சுதந்திரதின நிகழ்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய வேலைத்திட்டங்களுக்காக சுமார் 200 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

இந்த திட்டங்களுக்காக 575 மில்லியன் ரூபா செலவாகும் என முன்னதாக மதிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் பல கலந்துரையாடல்களின் பின்னர், ஜனாதிபதியின் ஆலோசனையின்படி அந்த செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறை சுதந்திர நிகழ்வுகளை ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, சம்பிரதாயபூர்வ நாட்டு மக்களுக்கு நிகழ்த்தும் உரையை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். அத்துடன் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வு தொடக்கத்தின் போது சிங்கள மொழியிலும், நிறைவடையும் போது தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படவுள்ளது.

Related posts

பண்னை நாகாபூசணிக்கு எதிராக முறைப்பாடு வழங்கியவர் விரைவில் வெளியேறுவார் – விக்னேஸ்வரன் சூட்சமம்

videodeepam

மகிந்தவைச் சந்தித்த சீனத் தூதுவர்  – உதவுவதாக வாக்குறுதி

videodeepam

எகிப்துக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

videodeepam