deepamnews
இலங்கை

அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – எரிசக்தி அமைச்சர்

அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறும் எந்தவொரு ஊழியர் அல்லது தொழிற்சங்கத்திற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பெட்ரோலிய சேவைகள் ஆறு மாதங்களுக்கு முன்பே அத்தியாவசியமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும்  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முழுமையான தடயவியல் தணிக்கைக்கு எதிராக பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க பல பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

எனவே, சேவையில் ஏற்படும் இடையூறுகளுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய அமைச்சர், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

Related posts

மீண்டும் குறைவடையும் எரிவாயு விலை…

videodeepam

விவசாயிகளுக்காக மீள அறவிடப்படாத 20 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்க திட்டம்

videodeepam

கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்றவும் முடிவு

videodeepam