deepamnews
இலங்கை

இனவாதத்தை கையில் எடுக்கிறது ரணில், ராஜபக்ச அரசு – ஜே.வி.பி. சந்திரசேகரன் கவலை.

ரணில், ராஜபக்சகளினுடைய அரசாங்கங்கள் தமது ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவது மக்களுக்கு தெரியும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில்  இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அந்த போராட்டத்தின் மூலமாக ஆட்சியாளர்களை அடித்து விரட்டினார்கள். அத்துடன் அந்த போராட்டத்தின் பொழுது நாட்டிலிருக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம், வேடர், மலையகம் உள்ளிட்ட அனைத்து மொழியை சார்ந்த மக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

அதன் மூலமாக தங்களுடைய மத நல்லிணக்கத்தை, இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதன்படி கடந்த 75 வருடங்களாக இருந்த ஆட்சியாளர்கள் தங்களுடைய இருப்புக்காகவும், தங்களுடைய ஆட்சியை அமைத்துக்கொள்ளுவதற்காகவும் மதவாதத்தையும் இனவாதத்தையும் பயன்படுத்தி அல்லது மத கலவரங்களை , இனக்கலவரங்களை பிரயோகித்து அதன் மூலமாக ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்தவர்களுக்கு “கோல்பேஸ்” போராட்டதின் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற காலம் இன்று உதயமாகி இருக்கின்றது.” என தெரிவித்துள்ளார்.

Related posts

13 ஆம் திருத்தம் தொடர்பில் வடக்கு அரசியல் கட்சிகளுக்கு இடையே பொது இணக்கப்பாடு இல்லை –  சுரேன் ராகவன் தெரிவிப்பு.

videodeepam

தொடருந்தில் மோதி பாடசாலை அதிபர் உயிரிழப்பு – நுவரெலியாவில் சம்பவம்

videodeepam

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கை வருகிறார்

videodeepam