இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தின் மூலமாக பெரிய ஹிட் கொடுத்து இருக்கிறார். படம் 12 நாட்களில் 540 கோடி வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.அடுத்து லோகேஷ் ரஜினியின் 171வது படத்தை இயக்க இருக்கிறார் எனவும் அதற்கான முதற்கட்ட பணிகளை விரைவில் தொடங்க உள்ளார் எனவும் தகவல்
வெளியாகியுள்ளது.
தலைவர் 171 பட பணிகளை தொடங்கிய பின் லோகேஷ் சோசியல் மீடியாவில் இருந்து பிரேக் எடுப்பார் என கூறப்படுகிறது.ஆறு மாதங்களுக்கு அவர் ட்விட்டர் பக்கம் வராமல் இருக்க போகிறாராம். லோகேஷ் இதே முறையை தான் விக்ரம் படத்துக்கும் கடைப்பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.