deepamnews
இலங்கை

வெள்ளத்தில் மூழ்கிய புத்தள மாவட்டம் – 110 பேர் பாதிப்பு!

புத்தளம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பெய்த கடும் மழையினால் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கடும் மழையினால் பாலாவி குவைட் நகர், ரத்மல்யாய, நாகவில்லு ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியிலுள்ள பெரும்பாலான வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட 30 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

பிள்ளையானின் வாகன தொடரணி விபத்து – குடும்பஸ்தர் படுகாயம்  

videodeepam

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என தெரிவித்தது அநாகரீகமான செயல்.-திருமலை நவம்.

videodeepam

தரம் ஒன்றில் இருந்து மாணவர்களுக்கு ஆங்கிலம்!

videodeepam