deepamnews
இலங்கை

மின் கட்டணம் செலுத்தாத எம்.பிக்கள் – 16 மில்லியன் ரூபாய் நிலுவையில் உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளுக்காக செலுத்தப்பட்ட வேண்டிய 16 மில்லியன் ரூபா மின் கட்டணம் நிலுவையில் உள்ளது என  கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டில், 74 மின் இணைப்புகளுக்கான மின் கட்டணம் செலுத்தப்பட்டவில்லை என  அந்த திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 மின் இணைப்புகளில் 29 இணைப்புகளுக்காக 6 வருடங்களில் மின் கட்டணமாக பெற வேண்டிய 5 மில்லியன் ரூபாய் பணம் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முறையான அனுமதியின்றி மின்சார சபை ஊழியர்களுக்கு 2022ஆம் ஆண்டுக்கான கொடுப்பனவுகள், ஊக்குவிப்புக்கள் மற்றும் தற்காலிக கொடுப்பனவுகளுக்காக 418 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Related posts

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் முத்தேர் இரதோற்சவம்,

videodeepam

இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் 16 துப்பாக்கிச் சூடுகள் – பிரதிப் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தகவல்

videodeepam

இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை நடாத்தப்பட வேண்டும் – செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தல்

videodeepam