deepamnews
இலங்கை

யாழ். வேம்படி மகளிர் பாடசாலை அகில இலங்கை ரீதியில் சாதனை – 110 மாணவிகளுக்கு 9 பாடங்களிலும் ‘ஏ’

2022ஆம் ஆண்டுக்கான ஜி.சீ ஈ. சாதாரணப் பரீட்சைப் பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைக் கண்டி மகமாயா பெண்கள் கல்லூரியும், இரண்டாவது இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையும், மூன்றாவது இடத்தைக் கொழும்பு றோயல் கல்லூரியும் பெற்றுள்ளன.

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாவது இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை பெற்றுள்ளது. இந்தப் பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 270 மாணவிகளில் 110 பேர் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்தியைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 74 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்தியைப் பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 16 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்தியைப் பெற்றுள்ளனர்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் 17 மாணவர்களும், யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரியில் 6 மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்தியைப் பெற்றுள்ளனர்.

Related posts

இந்திய நிதியமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட கலந்துரையாடல்

videodeepam

 தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம்!

videodeepam

கொழும்பில் திடீர் குழப்பத்திற்கு மத்தியில் ஏற்றப்பட்டது நினைவுச்சுடர்!

videodeepam