deepamnews
இலங்கை

கிளிநொச்சியில் பெண்கள் வன்முறைக்கெதிரான வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், பெண்கள் வன்முறைக்கெதிரான வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறைவாரத்தினை முன்னிட்ட 16 நாள் செயல்வாதத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வு இன்றைய தினம் பெரியபரந்தன் கிராம சேவகர் அலுவலகத்தில் காலை 9.30மணிக்கு நடைபெற்றது.

“பெண்கள் வன்முறைக்கெதிராக ஒன்றிணைந்து செயற்படுவோம்” எனும் தொனிப்பொருளில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மெழுகுவர்தி ஏற்றி வன்முறையினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கப்பட்டனர்.

அதன் பின்னர் கலந்து கொண்டிருந்த அதிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள் கையில் ஒறேஞ் நிறத்திலான பட்டியினை அணிந்து கொள்ளும் நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து, கிராம சேவகர் அலுவலகத்தில் விழிப்புணர்வு உரைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து, மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் வீட்டுக்கு வீடு சென்று விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு, கிளிநொச்சி உளநல சங்கம், கிளிநொச்சி மகாசக்தி சம்மேளனம் ஆகியவற்றின் நிதி அனுசரனையில் முன்னெடுக்கப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமாக கார்த்திகை மாதம் 25ம் திகதி தொடங்கம் சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய மார்கழி மாதம் 10ம் தேதி வரையிலான 16 நாட்கள் பிரகடணப்படத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.உதயனி, பெரியபரந்தன் கிராம உத்தியோகத்தர் நீலலோயினி, மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி உளநல சங்கம் மற்றும் கிளிநொச்சி மகாசக்தி சம்மேள உத்தியோகத்தர்கள், பால் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான செயற்குழுவினர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இலங்கைக்கு  அத்தியாவசியமானது – அமெரிக்க தூதுவர்

videodeepam

இராணுவத்தினரால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

videodeepam

கட்டில் தடுப்பில் சிக்கி 7 மாதக் குழந்தை உயிரிழப்பு.

videodeepam