deepamnews
இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருடன் கலந்துரையாடல்.

துபாயில் நடைபெறும் COP 28 எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கிரேக்க பிரதமர் Kyriakos Mitsotakis சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் அரச தலைவர்கள், அரச தனியார் துறை பிரதிநிதிகள், சூழலியலாளர்கள், புத்திஜீவிகள் பங்கேற்பதுடன், இந்த மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி  நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

அபிவிருத்தி  அடைந்து வரும் நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மூன்று யோசனைகளை இந்த மாநாட்டில் இலங்கை முன்வைக்கவுள்ளது.

Related posts

பிரபல இந்திய திரைப்பட பின்னணி பாடகர் ஹரிஹரன் இலங்கை வந்துள்ளார்.

videodeepam

2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வரிச்சலுகையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam

காதலர் தினம் தொடர்பில் சிறுவர்களுக்கான எச்சரிக்கை.

videodeepam