deepamnews
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கை மக்களின் உரிமைகளை அமெரிக்கா பாதுகாக்க வேண்டுமானால், இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசியாவின் பணிப்பாளர் கரோலின் நாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பைடன் நிர்வாகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு செய்தி அனுப்ப வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.

பயங்கரவாத எதிர்ப்பு மசோதா ஒவ்வொரு மனித உரிமை அளவீடுகளிலும் நிச்சயமான தோல்வி என்று அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கை மக்களின் உரிமைகளுக்காக அமெரிக்கா நிற்குமானால் இந்த சட்டத்திற்கு எதிராக ஜனாதிபதி ரணிலுக்கு கடிதம் அனுப்ப வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக விமர்சகர்கள் மற்றும் சிறுபான்மையினரை தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி வருவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது.

Related posts

இலங்கைக்கு விமான சேவையை மீண்டும் தொடங்கும் இரண்டு நாடுகள் !

videodeepam

இம்மாதத்திற்குள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் !

videodeepam

இலங்கையில் கோதுமை மாவின் விலை தொடர்பில் மகிழ்ச்சியான தகவல்

videodeepam