அலவத்துகொடையில் உள்ள புகைப்படக் கூடம் ஒன்றில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட இடத்தை சுற்றிவளைத்த பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு போலி நாணயத்தாள்கள் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட கணினிகள் உட்பட பல உபகரணங்களையும், இந்த இடத்தில் அச்சிடப்பட்ட 43 போலி ஐயாயிரம் ரூபாய் நோட்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த பண்டிகைக் காலத்தில் பொருட்களை வாங்கிவிட்டு 5000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவரைப் பற்றி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபரை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து ஐந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து சந்தேக நபர் ஐந்தாயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் தரகர் என்பது தெரியவந்துள்ளதுடன், அவரிடம் இருந்து மேலும் 40 ஐயாயிரம் ரூபாய் நோட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த தரகரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்படி புகைப்படக் கூடத்தில் சோதனை நடத்திய போலீஸார், சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (20) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.