ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு இன்று (21) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் முதல் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் வரை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாகவும், அவர்களுக்கு நீதி கோரியும் மக்கள் நினைவிடம் ஒன்று அமைக்கப்படும் என அதிவணக்கத்துக்குரிய பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தலைமையிலான கத்தோலிக்க திருச்சபை அண்மையில் அறிவித்தது.
ஈஸ்டர் ஞாயிறு, ஏப்ரல் 21, 2019 அன்று, இலங்கையில் உள்ள மூன்று கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று சொகுசு ஹோட்டல்களை குறிவைத்து தொடர்ச்சியான இஸ்லாமிய பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அதே நாளில், தெமட்டகொடையில் உள்ள வீட்டுத் தொகுதியிலும், தெஹிவளையில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, மொத்தத் தாக்குதலில் 45 வெளிநாட்டவர்கள், மூன்று பொலிஸ் அதிகாரிகள் மற்றும் எட்டு குண்டுதாரிகள் உட்பட 277 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.