ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டில் உயர்தரம் கற்கத் தகுதி பெற்ற 3,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.
நாடளாவிய ரீதியில் உள்ள 100 பிராந்திய அலுவலகங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் 30 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000 இரண்டு வருட காலத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.