deepamnews
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (11) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

இந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள  நிதியின் முதலாவது மீளாய்வுக்கு இணையாக இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீ நிவாசன் உள்ளிட்ட குழுவினர் இந்த விஜயத்தில் பங்கேற்க உள்ளனர்.

இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் சந்திக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்க சரியான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை திர்மானிக்க இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு

videodeepam

ஏ.ரி.எம். இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை

videodeepam