deepamnews
இலங்கை

ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கமும் தங்களது கட்சியும் தயாராக இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வெளான்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கத்தின் அனைத்து தரப்பினரும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டுக்காக உழைக்கக்கூடிய பொது வேட்பாளரை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவர் நிச்சயமாக நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வருவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது.

நாட்டின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டமே இதற்குக் காரணம் எனவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மதுபானசாலைகளுக்கு பூட்டு – மதுபான விற்பனைக்கு அனுமதி

videodeepam

பாண் , சீமெண்ட், பால் மா ஆகியவற்றின் விலையை தீர்மானிக்க நுகர்வோர் அதிகாரசபை தலையிடும் – நுகர்வோர் அதிகாரசபை

videodeepam

ஐ.நாவில் இலங்கை படுதோல்வி – சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தது வெற்றி!

videodeepam