deepamnews
சர்வதேசம்

ஜுன் மாதம் முதலாம் திகதியுடன் உக்ரைனை விட்டு வெளியேறும் ரஷ்யாவின் கூலிப்படை

எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதியுடன் பக்முத் நகரின் கட்டுப்பாடுகள் ரஷ்ய இராணுவத்திடம் முழுமையாக கையளிக்கப்படும் என ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப் படையின் தலைவர் யெவ்ஜெனி பிறிகோஷஜின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பக்முத் நகரில் இருந்து தமது படையினர் வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ரஷ்ய இராணுவத்தினரால் பக்முத் நகரின் நிலைமைகளை சமாளிக்க முடியாத பட்சத்தில் மீண்டும் தமது படைகள் பக்முத் நகருக்கு திரும்பும்.

இந்த நகரை கைப்பற்றுவதற்கான போரில் தமது படையை சேர்ந்த 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ரஷ்ய இராணுவத்திற்கு வெடிபொருட்களை விட்டு செல்லுமாறும் தனது படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்ய படையினருக்கு உதவும் வகையில் வாக்னர் கூலிப் படையினர் பக்முத் நகரில் நிலைகொண்டிருப்பார்கள். இராணுவ சூழ்நிலைகள் கடினமாக இருக்கும் போது அவர்கள் உதவி வழங்குவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

துருக்கி நிலநடுக்கம் தொடர்பில் கட்டுமான ஊழல் குற்றச்சாட்டில்  184 பேர் கைது – 600 பேரிடம் விசாரணை

videodeepam

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில்  புடின் மீண்டும் போட்டியிடுகிறார்.

videodeepam

தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – உகாண்டாவில் புதிய சட்டம்

videodeepam