deepamnews
இலங்கை

மரக்கறிகளின் விலை உயர்வு! –  கடைகளுக்கு பூட்டு.

நாட்டில் மரக்கறிகளின் விலை உயர்வு காரணமாக 75 சத வீதமான சிறியளவிலான  சில்லறை மரக்கறி விற்பனை  கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதங்களில் பெரும்பாலான மரக்கறிகளின் விலை 100 சத வீதத்தால் அதிகரித்ததால் மரக்கறிகளின் தேவை குறைந்ததாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 மரக்கறிகளின் விலை உயர்வால் பல நுகர்வோர் 100 – 250 கிராம் வரை மரக்கறிகளை வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், காய்கறிகள் விற்பனை செய்யப்படாததால் பழுதடையும்  மரக்கறிகளை தினமும் அகற்ற வேண்டியிருப்பதாகவும் சில்லறை  மரக்கறி வியாபாரிகளை அதிகமானோர்  கடைகளை மூடியுள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை,  சில்லறை மரக்கறி வியாபாரம் தடைப்பட்டுள்ளதால் பொருளாதார நிலையங்களுக்கு வரும் மொத்த வியாபாரிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாக பொருளாதார நிலையங்களின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மிகவும் வறண்ட காலநிலை, பலத்த மழை மற்றும் சில பகுதிகளில் காற்றுடன் கூடிய நிலை காரணமாக மரக்கறி அறுவடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாக்காளர் ஒருவருக்கு வேட்பாளர் செலவு செய்யக்கூடிய தொகை 20 ரூபாவாக அதிகரிப்பு

videodeepam

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர் சுற்றிவளைப்பில் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

videodeepam

பண்டிகைக் கால எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

videodeepam