deepamnews
இலங்கை

சிறுவர்களிடையே பரவும் இன்ஃபுளுவென்சா – முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்.

தற்பொழுது சிறுவர்களிடையே இன்ஃபுளுவென்சா (Influenza) தொற்று அதிகம் பதிவாகி வருவதாக வைத்தியர்கள் தெரவித்துள்ளனர்.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த  முகக்கவசம் அணிவது மிகவும் அவசியமென சீமாட்டி  ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இருமல், காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட நோய் அறிகுறிகளே தொற்றுக்குள்ளான சிறுவர்களிடம் அதிகளவில் அவதானிக்கப்பட்டன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மிக வேகமாக காய்ச்சல் பரவும் எனின், அது இன்ஃபுளுவென்சா தொற்றாகவே காணப்படும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மற்றும் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இந்த தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில், பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதோடு, முகக்கவசம் அணிவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்

Related posts

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

videodeepam

யாழ்ப்பாணத்தில் கசினோ நிலையம் செயற்படுகிறதா? – அறிமுகமானவர்களுக் மட்டும் அனுமதியாம்

videodeepam

இலங்கைக்குள் வரும் வேற்று நாட்டவர்கள் மதமாற்ற எண்ணத்துடன் செயற்பட்டால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்!

videodeepam