கடந்த நாட்களில் நுகர்வோருக்கு எரிபொருள் விநியோகிக்காத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு எரிபொருளை விநியோகிக்காத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த நாட்களில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படவில்லை.
அதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் எரிபொருளுக்கான வரிசைகள் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.