deepamnews
இலங்கை

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி விடுத்த அழைப்பிற்கு ஏற்ப இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் சட்டமா அதிபரும் பங்குபற்றியிருந்தார்.

அரசியலமைப்பு அல்லது நீதிமன்ற நடவடிக்கை தவிர்ந்த வேறு நடவடிக்கைகள் ஊடாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை தடுப்பதற்கு சாத்தியமில்லை என ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியை தெளிவுபடுத்தியதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

Related posts

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு

videodeepam

சஜித்துக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்ற செய்தி பொய்யானது – மனோ கணேசன் தெரிவிப்பு

videodeepam

அமெரிக்க இராஜதந்திரி சின்டி ஜனாதிபதியுடன் சந்திப்பு

videodeepam