deepamnews
இலங்கை

7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து  யாழ்.நகரப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும், வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவமயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும்  7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இன்று தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ் விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக் கதவடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கக் கோரி யாழ் நகர்ப்பகுதியில் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளால் துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் ஊடக சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்தன், இலங்கை தமிழரசிக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறீகாந்தா, டெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

Related posts

தையிட்டியில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரி – க.சுகாஷ் கண்டனம்.

videodeepam

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை

videodeepam

ஒழுங்குக்கு வராவிட்டால் மேலதிக நடவடிக்கை அரச அதிபர் தெரிவிப்பு.

videodeepam