deepamnews
இலங்கை

மனைவியைத் தீயிட்டுக் கொலைசெய்த கணவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு!

தனது மனைவியைத் தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொலைசெய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் மேற்படி நபருக்குத் தீர்ப்பளித்துள்ளது.

அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தனது மனைவியைத் தாக்கி அறையொன்றில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்வம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

Related posts

கிளிநொச்சி வைத்தியசாலையில் கர்ப்பப்பை அகற்றிய விவகாரம் – அமைச்சிடம் விளக்கம் கேட்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு.

videodeepam

மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலி இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம்

videodeepam

மன்னார் றோட்டறி கழகத்தால் மடிக்கணினி மற்றும் தூய்மையாக்கல் திரவங்கள் கையளிப்பு

videodeepam