deepamnews
இந்தியா

தமிழகத்தில் தொழில் தொடங்க உயர் சலுகைகள் அளிக்கிறோம்  – ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின் உறுதி.

தமிழகத்தில் தொழில் தொடங்குங்கள். அதற்கேற்ற சூழலையும், திறன்மிக்க மனிதவளம், உயர் சலுகைகளை அளிக்கிறோம்.  உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரபூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது.”

– இவ்வாறு தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயினில் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பழம்பெரும் வரலாறும் பாரம்பரியமும் பெற்ற இந்த நாடு போன்றே, வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழ்நாட்டின் சார்பாக இங்கு வந்து உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள மொழி எங்கள் தமிழ் மொழி.

தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம். எனவே தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.”  – என்றார்.

Related posts

திமுக அங்கம் வகித்த மத்திய அரசால் தமிழ்நாட்டில் 2 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை – ஓ.பன்னீர்செல்வம் தெரிவிப்பு

videodeepam

10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் நிலைப்பாட்டை காங்கிராஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் தெரிவிப்பி

videodeepam

தாயின் சிதைக்கு தீ மூட்டிய உடனேயே தாய் நாட்டின் சேவைக்கு தயாரான பிரதமர் மோடி

videodeepam