deepamnews
இலங்கை

தொலைபேசி, துணை உதிரிப்பாகங்களின் விலைகளும் உயர்வு!

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலை மீண்டும் உயரும் என அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய வருடாந்த வருமானம் 10 மில்லியன் ரூபாயிக்கும் அதிகமான வருமானத்தை பெறும் வர்த்தகர்களுக்கு இந்த வரி அறிவிடப்படும் நிலையில் இறக்குமதியாளர்கள் பொருட்களை சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கும்போது வரியைச் சேர்க்கின்றனர்.

இதனையடுத்து சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்கும்போது கூடுதல் வரிகளுடன் விலையை அதிகரிப்பதாக இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கம் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை 2.5 வீதம் என்று அறிவித்துள்ளது. எனினும் தயாரிப்பு வாடிக்கையாளரை சென்றடையும் போது, அது கிட்டத்தட்ட 5 வீதமாக இருக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், கையடக்க தொபைபேசிகள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலை மீண்டும் உயரும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

திருமுறிகண்டியில் புத்தர் சிலை அமைக்க தனிநபர் முயற்ச்சி மக்கள் எதிர்ப்பு.

videodeepam

13 ஆவது திருத்தம் தொடர்பாக தமிழ் கட்சிகளுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல – ஜனாதிபதி தெரிவிப்பு.

videodeepam

இஸ்ரேலில் மேலுமொரு இலங்கைப் பிரஜை உயிரிழப்பு.

videodeepam