deepamnews
இலங்கை

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களை கௌரவிப்பு நிகழ்வு

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய, யா/ காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (24) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கடந்த 35 ஆண்டுகளின் பின்னர் தொடர்ச்சியாக 2020, 2021, 2022 ஆகிய மூன்று வருடங்களாக மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலே பெற்று சித்தியடைந்து வருகின்றனர்.

அந்தவகையில் அவ்வாறு சித்தியடைந்த மாணவர்கள், அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இவ்வாறு நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது சித்தி எய்திய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Related posts

ஜூலைக்குப் பின் சர்வஜன வாக்கெடுப்பு – ஜனாதிபதி  ரணில் திட்டம்

videodeepam

வறுமையிலும் தங்கம் வென்று சாதித்த மடுப்பிரதேச மாணவி!

videodeepam

ஐ.எம்.எப். உடன்படிக்கைக்கு நாடாளுமன்ற அனுமதி: அமைச்சரவை அங்கீகாரம்

videodeepam