இலங்கை சர்வதேச நாணநிதியத்தின் பொருந்தக்கூடிய அனைத்து கொள்கைகளிற்கும் இணங்குவதற்காக காத்திருப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான முக்கிய அதிகாரிகளான பீட்டர் புரூவரும் மசகிரோ நொசாக்கியும் இதனை தெரிவித்துள்ளனர்.
2. 9 மில்லியன் டொலர் கடனுதவி தொடர்பில் செப்டம்பர் முதலாம் திகதி இலங்கையுடன் சர்வதேச நாணயநிதியம் பணியாளர் மட்ட இணக்கப்பாட்டினை எட்டியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான கடனுதவி சர்வதேச நாணயநிதியத்தினது முகாமை நிறைவேற்று சபையினதும் அங்கீகாரத்திலேயே தங்கியுள்ளது,சர்வதேச நாணயநிதியத்தின் பொருந்தக்கூடிய அனைத்து கொள்கைகளிற்கும் இலங்கை இணங்கியதும்( முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வது கடன்பேண்தகுதன்மையை ஏற்படுத்துவது)சர்வதேச நாணயநிதியத்தின் முகாமை இலங்கையுடனான ஏற்பாட்டிற்கு அங்கீகாரம் வழங்குமாறு சர்வதேச நாணயநிதியத்தினது நிறைவேற்று சபைக்கு பரிந்துரைக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாணயநிதியத்துடனான ஏற்பாடு அங்கீகரிக்கப்பட்டதும் நாணயநிதியத்தின் வழக்கமான மதிப்பாய்விற்கு உட்பட்டு உறுப்பினருக்கு தவணை முறையில் கடனுதவி வழங்கப்படும்எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.