அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாத விவாதங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிராக 01 வாக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்று காலை முதல் நாடாளுமன்றில் இடம்பெற்றதுடன், நேற்றைய தினமும் விவாதம் நடைபெற்றது.