deepamnews
இலங்கை

200 இற்கும் மேற்பட்டவர்களுடன் மற்றுமொரு படகு கடலில் தத்தளிப்பு

இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கடலில் தத்தளித்த நிலையில் ஜப்பான் கடற்படையால் மீட்கப்பட்டு தற்போது வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அகதிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்வோருடன் மற்றொரு படகு நடுக்கடலில் சிக்கித் தவித்த நிலையில், இத்தாலி அந்த படகை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. இத்தாலியின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள Giorgia Meloni அந்தப் படகை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

எனவே, அந்த படகு நேற்று பிரான்ஸ் நோக்கிப் புறப்பட்டது. இத்தாலி அந்த படகை ஏற்றுக்கொள்வது குறித்து மௌனம் சாதித்த நிலையில், பிரெஞ்சு தொண்டு நிறுவனமான SOS Mediterranee, பிரான்ஸ் கடற்படை அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளது.

அந்த படகு பிரெஞ்சுத் தீவான Corsica பகுதியிலுள்ள கடல் பரப்பை வியாழனன்று சென்றடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரான்ஸ் தரப்பில் என்ன பதில் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அந்த படகிலுள்ள புலம்பெயர்வோரில் பலர், 18 நாட்களாக கடலிலேயே இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

.நெஞ்சை பதைபதைக்க வைத்த செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

videodeepam

போர்க்காலத்தில் உயிரிழந்தவர்களுக்காகப் பொதுத்தூபி – மஹிந்த ஆதரவு

videodeepam

கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

videodeepam