deepamnews
சர்வதேசம்

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

2024-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற சமயத்தில் அமெரிக்காவில் கொரோனா உச்சத்தில் இருந்தது. இதையடுத்து ஜோ பைடன் தலைமையிலான அரசு, தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.

இதனிடையே அமெரிக்காவில் அடுத்த அதிபர் தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பான பேச்சுக்கள் இப்போதே எழத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், 2024-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புவதாகவும், அதே சமயம் இதுகுறித்த உறுதியான முடிவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னிப்புக் கோரினார்  கனடா பிரதமர் ட்ரூடோ.

videodeepam

விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் ஐ.எம்.எப். பணிப்பாளர்

videodeepam

ரஷ்யாவின் ஷிவேலுச் எரிமலை வெடித்துச் சிதறல் – விமான போக்குவரத்திற்கு தடை

videodeepam