deepamnews
இந்தியா

ஜி 20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

ஜி 20 அமைப்பின் தலைமைத்துவம் உத்தியோகபூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாலி தீவுகளில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான மாநாட்டின் நிறைவில் இந்த தலைமைத்துவ மாற்றம் நடைபெற்றுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளும் ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி  20 நாடுகளின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் நேற்று முன்தினம்  ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றார்கள்.

ஜி 20 அமைப்பிற்கு தற்போது தலைவராகவிருக்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவினால் (Joko Widodo)இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் உத்தியோகபூர்வமாக தலைமைத்துவம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related posts

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில்  பா.ஜ.க. 2 சதவீத வாக்குகளையே பெறும் – ராகுல் காந்தி தெரிவிப்பு.

videodeepam

இந்திய திரையுலக பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்பட்டது

videodeepam

உலகின் மிகப்பழமையான மொழியான தமிழ் – இந்திய பிரதமர் மோடி பெருமிதம்

videodeepam