deepamnews
இலங்கைவிளையாட்டு

வறுமையிலும் தங்கம் வென்று சாதித்த மடுப்பிரதேச மாணவி!

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/ பெரியபண்டிவிரிச்சான் தேசிய பாடசாலையின் மாணவியும், பெரிய பண்டிவிரிச்சான் கிழக்கு சென்.மரிய கொறற்றி விளையாட்டுக் கழகத்தை சேர்ந்தவருமான பி.றக்சிகா என்ற மாணவியே பெண்களுக்கான 400 M ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று மடு கல்வி வலயத்திற்கும், மடு பிரதேச செயலக பிரிவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த மாணவி உட்பட 9 மாணவர்கள் பெரிய பண்டிவிரிச்சான் அதிபர் யு.ஏ ஜெயசீலன் வாஸ் அவர்களின் வழிகாட்டலில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் யு.அன்ரனிஸ் ரோச் அவர்களின் பயிற்றுவிப்பில் இந்த வருடமும் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் மாகாண மட்ட அளவில் சாதனைகளை படைத்து தேசியளவில் பங்குபற்றியிருந்தனர்.

மேலும் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்கம் வென்ற பி.றக்சிகா என்ற மாணவி போதுமான வருமானம் இல்லாமல் வறுமையை பின்னணியாக கொண்ட4 பெண் பிள்ளைகள் உட்பட ஆறு பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் மூத்த பிள்ளையாக பிறந்தவர்.

இவ்வாறான வறுமையான குடும்பத்தில் இருந்து கடும் துயரங்களை எதிர்கொண்டு விளையாட்டு துறையில் இவ்வாறு பல சாதனைகளை படைத்து வருகிறார்.

குறித்த மாணவிக்கு புலம்பெயர் தமிழ் உறவுகள் மற்றும் உள் நாட்டில் வசிக்கும் தன்னார்வலர்கள் உதவும் பட்சத்தில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து தேசிய ரீதியில் விளையாட்டு துறையில் ஒரு தமிழ் மாணவி பல சாதனைகளை படைத்து தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Related posts

இலங்கையில் வரிக் கொள்கையை மறுசீரமைப்பது இன்றியமையாதது – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

videodeepam

விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி.

videodeepam

பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

videodeepam