deepamnews
இலங்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையே சந்திப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் இடையே எதிர்வரும் புதன்கிழமை  சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல் அறிவிப்பிற்கு பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்கள், தேர்தல் இடம்பெறும் விதம் மற்றும் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிராக எதிர்வரும் சில தினங்களுக்குள் நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளையும் செல்லுபடியற்றதாக்குமாறு ரீட் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் இடையீட்டு மனுதாரராக கண்காணிப்பு அமைப்பு முன்னிலையாகவுள்ளதாகபெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டாபய மீதான கொலை முயற்சி விவகாரம் தொடர்பில் பொன்சேகா வெளியிட்ட  தகவல்

videodeepam

சர்வதேச  “பேசு தமிழா பேசு” பேச்சு போட்டியில் யாழ் இளைஞன் முதலிடம்

videodeepam

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் திடீர் மரணம்

videodeepam